எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல யோகா குரு பாபா சிவானந்த். இவருக்கு வயது 128. இவர் நேற்று முன்தினம் இரவு வாரணாசியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் உயிரிழந்தார். ஹரிச்சந்திர காட்டில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.
பாபா சிவானந்த் ஆகஸ்ட் 8ம் தேதி, 1896ம் ஆண்டு வங்கதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஆறு வயது இருக்கும் போதே, அவரது பெற்றோர் உயிரிழந்தனர். ஆசிரமத்தில் சேர்ந்த இவர் ஆன்மிக வாதியாக மாறினார். யோகா பயிற்சி அளித்து வந்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு, பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: யோகா மற்றும் தியானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். யோகா மூலம் சமூகத்திற்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


