Idhayam Matrimony

சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி: லாரன்ஸ் வாங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : சிங்கப்பூா் நாடாளுமன்ற தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆளுங்கட்சியான பிஏபி கட்சி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மொத்தமுள்ள 97 இடங்களில் 87 இடங்களை அக்கட்சியே கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வாங்க் மீண்டும் பதவியில் தொடருகிறார். இதையடுத்து, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்கை மனதார வாழ்த்துகிறேன். இந்தியாவும் சிங்கப்பூரும் பன்முக பங்களிப்பை பகிர்ந்து கொண்டுள்ளது. இருநாட்டு மக்களும் இணக்கமாக உறவைக் கடைப்பிடிக்கின்றனர். இந்தநிலையில், சிங்கப்பூருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக தேசமான சிங்கப்பூர், மக்கள் செயல் கட்சியின்(பிஏபி) கோட்டையாக திகழ்கிறது. அக்கட்சியே கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் லாரன்ஸ் வாங்க் பிரதமராகப் பதவி வகிக்கிறார். சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டுக்குப் பின், தொடர்ந்து 60 ஆண்டுகளாக பிஏபி கட்சி ஆட்சியில் நீடிக்கிறது. வெளிப்படையான அரசு நிர்வாகமும், சிங்கப்பூரின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியும் பிஏபி கட்சி மீதான மக்களின் நம்பிக்கைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், சிங்கப்பூர் தேர்தலில் தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து