எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதை தணிப்பதற்கு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதேநேரம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான செயல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணையான 'அப்தலி'யை பாகிஸ்தான் பரிசோதித்தது. 450 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் பெற்ற இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கியதாக ராணுவம் கூறியுள்ளது.
வீரர்களின் தயார் நிலையை உறுதி செய்யவும், தொழில்நுட்ப திறனை மதிப்பிடவும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள ராணுவம், 'சிந்து பயிற்சி'யின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானின் இந்த ஏவுகணை பரிசோதனைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. போர் பதற்றத்துக்கு மத்தியில் நடந்துள்ள இந்த பரிசோதனை அப்பட்டமான ஆத்திரமூட்டும் செயல் எனவும், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


