எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
கான்பூரில் உள்ள சமான்காஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டடத்தின், முதல் இரு தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென எரிந்த தீ, மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 4வது மாடிக்கும் தீ பரவிய நிலையில், முகமது டேனிஷ், 45, நஷ்னீன் சாபா,42, ஆகியோர் உடல்கருகி உயிரிழந்தனர். இவர்களின் 3 மகள்களும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இறுதியில் அவர்களும் உயிரிழந்தனர். 4-வது மாடிக்கும் பரவிய தீயால், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாகவே, தீவிபத்து மேலும் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


