Idhayam Matrimony

தீவிரவாதத்துக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      உலகம்
Japan 2024-02-14

Source: provided

டோக்கியோ : தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில் ஜப்பானும் ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றைய தினமே கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் புதின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நகாடானி டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது நகாடானி கூறும்போது, “இந்தியாவும் ஜப்பானும் மிக நெருங்கிய நட்பு நாடுகள். சர்வதேச, பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை ஜப்பான் மிக வன்மையாக கண்டிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஜப்பான் முழுஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து