எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் நேற்று 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் சார்பில் 259 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இவற்றில் சென்னையில் உள்ள கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேற்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அதேபோல், நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையின்போது மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. குறிப்பாக வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் போர் ஒத்திகை நடைபெற்றன.
போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது. இதன்படி, சென்னையில் 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்தது. சென்னையில் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் அவற்றை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றி ஒத்திகை நடந்தது. மாவட்ட கலெக்டர், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். போர்ச்சூழலின்போது, எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு செயல் விளக்கம் தரப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


