எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்,214 புதிய பேருந்துகள் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொது மக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களைதொடங்கி வைத்தல், புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தல், பழையபேருந்துகளை புதுப்பித்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல்,பணிச்சுமையை குறைக்கும் விதமாக நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தல், பணியாளர்களுக்கான ஓய்வு அறைகளை மேம்படுத்தல் போன்ற பல்வேறுதிட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.இந்த சேவைகளால், மகளிர், மாணவ, மாணவியர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்கள், திருநங்கைகள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், மூத்தகுடிமக்கள் மற்றும் குறிப்பிட்ட இதர பிரிவினருக்கு கட்டணமில்லாபயணச்சலுகை வழங்கப்படுகிறது.
சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக தொடங்கப்பட்ட மகளிர் விடியல் பயணம்திட்டம்; மூலம் 684 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்வர் . மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில், தமிழ்நாட்டின்அனைத்துப் பகுதிகளிலும், பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, 3,727 புதியபேருந்துகளும், 1500 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டும் பயன்பாட்டில் உள்ளன.இதன் தொடர்ச்சியாக, சென்னை தீவுத்திடலில்நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 27 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகளையும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 114 புதிய பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 31 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு14 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 18 புதிய பேருந்துகளும் என மொத்தம் 214 புதிய பேருந்துகளை பொதுமக்களின்பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 214 புதிய பேருந்துகளில், மகளிரின் சிறப்பான வரவேற்பினைபெற்ற “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக” 70 நகரப் பேருந்துகளும்அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பேருந்துகளின் சேவைகளை தொடங்கிவைத்த முதல்வர் பேருந்தில் ஏறி பேருந்தினை பார்வையிட்ட பிறகு,விடியல் பயணம் திட்டத்தில் மூலம் பயன் பெறும் பெண்களுக்காக முறையாகபேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்லவேண்டும் என்று நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமோழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் . டி.ஆர். பாலுஆ. ராசா, தயாநிதி மாறன், திரு. தலைமைச் செயலாளர்.முருகானந்தம், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி,, போக்குவரத்துக் கழகங்களின்மேலாண் இயக்குநர்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


