Idhayam Matrimony

இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது: காம்பீர்

புதன்கிழமை, 7 மே 2025      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

மும்பை : இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் தீவிரவாதம் ஒழியும் வரை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

விளையாடுவதில்லை... 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நெடுங்காலமாகவே எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதனால் 2007 முதல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கும் பயணம் மேற்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதுகின்றன. மற்ற போட்டிகளில் விளையாடுவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. சமீபத்தில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய முப்படைகள் ஒருங்கிணைந்து செவ்வாய் நள்ளிரவில் அதிரடித் தாக்குதல் நடத்தியது. 

எந்த விதமான உறவும்... 

கௌதம் காம்பீர் இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது: என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் தீவிரவாதம் ஒழியும்வரை இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடக் கூடாது. இரு நாட்டிற்கும் இடையேயான கிரிக்கெட், பாலிவுட் என எந்த விதமான உறவும் தேவையில்லை. ஏனெனில் இவையெல்லாம் இந்திய ராணுவ வீரர்கள், மக்களை விட முக்கியமானதில்லை என நான் இதற்கு முன்பாகவே சொல்லியிருக்கிறேன். 

முடிவெடுக்க முடியாது...

இருப்பினும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவு செய்வது அரசாங்கம்தான். போட்டிகள் நடைபெறுவதும், திரைப்படங்கள் எடுப்பதும், பாடகர்கள் பாடுவதும் நமது குடும்பத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு சமனாகாது. ஆசிய கோப்பை விளையாடுவது குறித்து நான் முடிவெடுக்க முடியாது. பி.சி.சி.ஐ., இந்திய அரசும் இதில் முடிவு எடுக்கும். அப்படியே விளையாட அனுமதித்தாலும் அதை நாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து