Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது: அமைச்சர் கிரண் ரிஜிஜு

வியாழக்கிழமை, 8 மே 2025      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

புதுடெல்லி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு  கூறினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சந்தீப் பந்தோபாத்யாய, தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவ சேனா(யுபிடி) எம்.பி.  சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) எம்.பி.  சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தள எம்.பி.  சஸ்மித் பத்ரா, சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ஐக்கிய ஜனதா தள எம்.பி.  சஞ்சய் ஜா, ஏஐஎம்ஐஎம் எம்.பி.  அசாதுதின் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் போது அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியைக் காட்டினர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளன. எம்.பி.க்களிடமிருந்து சில ஆலோசனைகள் வந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது. என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க இயலாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து