முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி பயங்கரவாத செயல்களை போர் நடவடிக்கையாக கருத அரசு முடிவு? அரசு உயர் வட்டாரங்கள் தகவல்

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Modi-2025-05-10

புதுடெல்லி, எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இந்தியாவுக்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 10) ஈடுபட்டார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் 26 இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று (சனிக்கிழமை) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள நான்கு விமானப்படைத் தளங்களில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், இந்த சந்திப்பு நடந்தது.

 மேலும், பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சர்கோதா விமானப்படை தளத்தின் மீது இந்தியா ஒரு சக்திவாய்ந்த பதிலடி தாக்குதலை நடத்தியது. மேலும், இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில், ரஹிம் யார் கான் விமானநிலையம் முற்றாக சேதமடைந்தது. அதோடு, இந்திய ராணுவம் பயங்கரவாத ஏவுதளங்களை தகர்த்துள்ளது. 

இந்நிலையில், எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இந்தியாவுக்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து