எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
மீண்டும் தொடக்கம்...
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போட்டிகள் மீண்டும் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன. ஜூன் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் - டெல்லி....
டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் என கூறப்படுகிறது. ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும். இதில் எதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறாது.
ப்ளே ஆஃப் சுற்று விவரங்கள்:
குவாலிபையர் 1 - மே 29. எலிமினேட்டர் - மே 30, குவாலிபையர் 2 - ஜூன் 1, இறுதிப் போட்டி - ஜூன் 3 ஆம் தேதி முறையே நடக்க உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


