எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சவுதி : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
நண்பர்களே வாருங்கள் நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுதங்களை விற்க வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை விற்பனை செய்வோம். 2 நாடுகளிலும் சக்தி வாய்ந்த, வலிமையான, நல்ல தலைவர்கள் உள்ளனர் என்றேன் என்று தனது சமரசப் பேச்சு விவரத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான், டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் கலந்து கொண்ட அமெரிக்க சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் மன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு சாத்தியமான அணு ஆயுதப்போரை தவிர்த்து அமைதியை நிலைநாட்ட தனது நிர்வாகம் உதவியது. போர் நடந்திருந்தால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.
துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ரூபியோ தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் உண்மையில் ஒத்துப்போயின. அவர்கள் இணக்கமாக இருக்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். நாம் அவர்களை இன்னும் கொஞ்சம் தூரம் அழைத்துச் செல்லலாம். அவர்கள் இருவரும் இணைந்து வெளியே சென்று இரவு உணவு சாப்பிடவேண்டும். அது நன்றாக இருக்கும் இல்லையா?
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க எனது நிர்வாகம் ஒரு வெற்றிகரமான முயற்சியை மேற்கொண்டது. அதற்காக நான் பெரும் அளவில் வர்த்தகத்தை பயன்படுத்தினேன். நான் அவர்களிடம் சொன்னேன், “நண்பர்களே வாருங்கள் நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுதங்களை விற்க வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை விற்பனை செய்வோம். இரண்டு நாடுகளிலும் சக்தி வாய்ந்த, வலிமையான, நல்ல தலைவர்கள் உள்ளனர் என்றேன் இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


