Idhayam Matrimony

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, தமிழக அரசு, அமாலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 14 மே 2025      தமிழகம்
chennai-high-court 2025-01-01

Source: provided

சென்னை : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 3 நாட்கள் வரை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்தது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை சி.பி.ஐ. விசாரணை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து