எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ: லக்னோவில் டபுள் டெக்கர் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் 2 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
பீஹாரில் இருந்து டில்லிக்கு டபுள் டெக்கர் பஸ்சில் 70-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். லக்னோ அருகே பஸ் சென்று கொண்டு இருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர்வாசிகளும், தீயணைப்பு படையினருடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், குழந்தைகள் 2 பேர் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சம்பவ இடத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


