Idhayam Matrimony

அமித் ஷா அழைக்காதது வருத்தமளிக்கிறது: ஓ.பி.எஸ்.

வியாழக்கிழமை, 15 மே 2025      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை: சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று ((மே 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைபாட்டை தெரிவித்து விட்டோம். மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து தேர்தல் கூட்டணிக் குறித்து விரைவில் அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக யாருடனும் மறைமுகமாக பேசவில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது தற்காலிகமானதே. தவெக தலைவர் விஜய் நல்ல இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து