Idhayam Matrimony

அ.தி.மு.க.வுடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் சீமான்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
Seeman 2024-03-22

Source: provided

சென்னை : கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை சீமான் வெளியிட இருக்கிறார்.  

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாத வகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

இதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கூட்டணி தொடர்பாக பலமுறை ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இப்படி அ.தி.மு.க. கூட்டணி கதவுகள் திறந்திருக்கும் நிலையில் சீமான் பிடி கொடுக்காமலேயே இருந்து வருகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கே நாம் தமிழர் கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோவையில் நாளை  நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் கோவையில் நடைபெறும் கூட்டத்தை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசுகிறார்.

அப்போது வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்துவிடுமாறு சீமானுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கூட்டத்தில் சீமான் தனித்து போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு யாருடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதி செய்ய இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலையும் சீமான் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து