எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தேரூர் பேரூராட்சி தலைவி அமுதராணியின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவியாக இருப்பவர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அமுதராணி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மேலும், அவரது மகளுக்கு கிறிஸ்தவர் (பிற்படுத்தப்பட்டோர்) என ஜாதிச் சான்றிதழையும் பெற்றுள்ளார். இப்படியிருக்கையில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, பட்டியலினத்தவருக்கு (பொது) ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இது சட்டப்படி தவறு என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அமுதராணிக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.
அதில், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அமுதராணியின் வெற்றி செல்லாது. கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து, பின்னர் பட்டியலினத்தவர் எனக் கூறி அரசின் பலன்களை அனுபவிப்பது குற்றம். அரசியல் கட்சியின் பகடைக்காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறி, தேர்தல் ஜனநாயகத்தையே கேலி கூத்தாக்குகின்றனர் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


