Idhayam Matrimony

காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் முக்கிய பயங்கரவாதி பலி

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      இந்தியா
Kashmir 2024-03-28

Source: provided

 ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவன், 2 பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவன் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 48 மணிநேரத்தில் 6 பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட இரு ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் ஐ.ஜி.பி., வி.கே. பேர்டி மற்றும் மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

 மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் கேலர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 13ம் தேதி கேலர் பகுதியை எங்களின் படைகள் சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் ராணுவ படைகள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினோம். இதில், பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினோம்.

அதேபோல, எல்லை கிராமமான டிரால் பகுதியில் 2வது கட்ட ஆபரேஷனை நிகழ்த்தினோம். நாங்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகள் வெவ்வேறு வீடுகளில் பதுங்கியிருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த நேரத்தில், கிராமத்து மக்களைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முன் இருந்த சவாலாக இருந்தது. அதன்பிறகு, மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவனான ஷாஹித் குட்டே, ஒரு ஜெர்மன் சுற்றுலாப் பயணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு பெரிய தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தான். மேலும், அவன் பயங்கவாத செயல்களுக்கு நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தான், இவ்வாறு அவர் கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து