எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை துருக்கி அளித்தது அம்பலமாகி உள்ளது.பாக்., ராணுவம் நம் மீது ஏவிய ட்ரோன்களில், துருக்கி நாட்டின், 'அசிஸ்கார்டு சோங்கர்' வகை ட்ரோன்கள் இருந்ததை, நம் ராணுவ கர்னல் சோபியா குரேஷி உறுதிபடுத்தினார்.
இந்நிலையில் நேற்று (மே 16) பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். நேற்று, 24க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் டில்லியில் கூடி இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுத்தனர்.
இது குறித்து, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:துருக்கி மற்றும் அஜர்பைஜானுடனான அனைத்து வர்த்தகத்தையும், முடிவுக்குக் கொண்டுவர வர்த்தக கூட்டமைப்பின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்தவொரு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியும் நடக்காது. இந்திய திரைப்படத் துறையும் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் தங்கள் படங்களைப் படமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. துருக்கி, அஜர்பைஜான் நாட்டிற்கு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


