முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியோமிகா சிங்கின் சாதி குறித்த பேச்சு: சமாஜ்வாதி எம்.பி.யால் மீண்டும் சர்ச்சை

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      இந்தியா
Colonal-Shophia-Croti

Source: provided

லக்னோ : கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் என்பதால் பா.ஜ.க. அமைச்சரால் குறிவைக்கப்பட்டதாகவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜ்புத் என்று நினைத்து விட்டுவிட்டதாகவும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, கர்னல் குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் மே 7 முதல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்கள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்து செய்தியாளர்களிடம் உரையாற்றினர்.

இந்த நிலையில் மத்தியப் பிரதேச பா.ஜ.க. அமைச்சரான விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை (கர்னல் சோபியா) அனுப்பி பழிவாங்கினோம். பிரதமர் மோடி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியை அவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுப்பினார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சமாஜ்வாதி எம்.பி ராம்கோபால் யாதவ், “அவர்களுடைய அமைச்சர்களில் ஒருவர் கர்னல் குரேஷியை திட்டினார்.  ஆனால்  வியோமிகா சிங் ஹரியானாவைச் சேர்ந்த ஜாதவ் மற்றும் ஏர் மார்ஷல் பாரதி பூர்னியாவைச் சேர்ந்த யாதவ்.  ஒருவர் முஸ்லிம் என்பதால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். மற்றொருவர் ராஜபுத்திரர் என்று நினைத்து காப்பாற்றப்பட்டார். பா.ஜ.க.வினர்  ராணுவத்தின் சாதனைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சாதனைகளையே முன்னிலைப்படுத்துகிறார்கள்.” என்று அவர் கூறினார். இந்த கருத்துக்கள் இப்போது மீண்டும் சர்ச்சையை பற்றவைத்துள்ளது.

இதுகுறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஒரு துணிச்சலான மகளை சாதியின் எல்லைக்குள் பிணைக்கும் ராம்கோபால் யாதவின் செயல் கட்சியின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது.  இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரும் 'தேசிய கடமையை' செய்கிறார். அவர்கள் எந்த சாதி அல்லது மதத்தின் பிரதிநிதி அல்ல” என்று தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து