எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது. மே 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இது நடைபெற இருக்கிறது.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் மூண்டது. இதனிடையே அமெரிக்கா தலையிட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைத்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது புகார் கூறத் தொடங்கியுள்ளன.
இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’எனும் பெயரில் கூட்டங்களை நடத்த இருக்கிறது. இந்தக் கூட்டங்கள் மே 20 முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இக்கூட்டங்களில், மத்திய அரசு தேசிய பாதுகாப்பை கையாள்வது குறித்தும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்தும் கேள்விகளை எழுப்ப உள்ளது.
மே 20 முதல் 30 வரை நடைபெற இருக்கும் இக்கூட்டங்கள் 15 மாநிலங்களின் முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. இதில் டெல்லி, சிம்லா, ஹல்துவானி, பாட்னா, ஜபல்பூர், புனே, கோவா, பெங்களூரு, கொச்சி, குவாஹாட்டி, கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வர் மற்றும் பதான்கோட் ஆகிய நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு பின்பு பாஜக சார்பிலும் நாடு முழுவதிலும் மூவர்ண கொடி யாத்திரைகள் நடைபெற்றன. இதற்கு எதிராக காங்கிரஸ் இந்த ‘ஜெய் ஹிந்த் சபா’-க்களை நடத்துவதாகக் கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


