Idhayam Matrimony

காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      உலகம்
Pak 2023 07-18

Source: provided

இஸ்லாமாபாத் : காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில், அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு வருகை தந்த அவர், ​​இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், “அமைதிக்காக நாங்கள் (இந்தியாவுடன்) பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்சினையும் அடங்கும்” என்று கூறினார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) பேசிய வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், “அனைத்து சர்ச்சைக்குரிய விஷயங்களையும் முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான், இந்தியாவுடன் ஒருங்கிணைந்த உரையாடலை மேற்கொள்ள விரும்புகிறது.   சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்ய பஹல்காம் சம்பவத்தை இந்தியா ஒரு காரணமாக பயன்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து