Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு நிதி உதவி: மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமைச்சர் ராஜ்நாத் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      இந்தியா
Rajnath-Singh-2025-05-09

Source: provided

புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர் தான். முழு படம் பின்னர் வெளிப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போன்றது. பாகிஸ்தான் மீண்டும் மோசமான நடத்தைக்குத் திரும்பினால், இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும்.

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இரண்டாவது தவணையாக 1.023 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதியுதவியும் பயங்கரவாத நிதியுதவிக்குக் குறைவானது அல்ல. அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் முயற்சிக்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கிய 1 பில்லியன் டாலர் உதவியை ஐ.எம்.எப். மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியா விரும்புகிறது. ஐ.எம்.எப்.-க்கு நாம் வழங்கும் நிதி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதை இந்தியா விரும்பவில்லை" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து