Idhayam Matrimony

விண்ணில் பாயும் 101வது ராக்கெட்: திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      இந்தியா
ISRO 2023 07-14

Source: provided

திருப்பதி : வரும் 18ம் தேதி விண்ணில் ஏவ உள்ள 101வது ராக்கெட் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.

கடந்த ஜனவரி மாதம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 100வது ராக்கெட்டை, இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. மே 18ம் தேதி விண்ணில் 101வது ராக்கெட்டான, 'பி.எஸ்.எல்.வி., - சி 61' ஏவப்பட உள்ளது. இதன் வாயிலாக, புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

இந்நிலையில், மே 18ம் தேதி விண்ணில் ஏவ உள்ள 101வது ராக்கெட் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், மே 18ம் தேதி அதிகாலை 5.59 மணிக்கு, இந்தியாவின் 101வது ராக்கெட்டை பி.எஸ்.எல்.வி.-சி61 மூலம் ஏவ திட்டமிட்டுள்ளோம். இது 63வது பி.எஸ்.எல்.வி. ஏவுதல் ஆகும்'என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து