எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் ஐ.பி.எல்...
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் இன்று (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.
விளையாட வேண்டாம்...
ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
தனிப்பட்ட முடிவு...
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது தொடர்பான முடிவை தனிப்பட்ட வீரர்களிடமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விட்டுவிட்டது. வீரர்கள் எடுக்கும் முடிவு என்பது மிகவும் முக்கியம். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் நிறைய பணம் ஈட்ட முடிந்தாலும், அது வெறும் போட்டியே. இந்த மாதிரியான சூழலில் முடிவெடுக்கும் இடத்தில் நான் இருந்தால் எனது முடிவு மிகவும் எளிமையானது.
பாதுகாப்பு முக்கியம்...
மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக நான் மீண்டும் செல்ல மாட்டேன். காசோலைகளைக் காட்டிலும் உயிர் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம். ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டேன் எனக் கூறுவது என்னுடைய தனிப்பட்ட கருத்தே. இதனால், வீரர்கள் யாரும் தங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றார்.
மீண்டும் இந்தியாவுக்கு...
ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் தொடங்கப்படும் ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


