எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : நமது நாட்டில் ஆன்லைன் இணையதளம் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ' ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பாகிஸ்தான் கொடி மற்றும் சின்னங்களை இந்தியாவில் விற்பனை செய்வதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷிக்கு அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கடிதம் மூலம் புகார் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அந்நாட்டு நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், உபயு இந்தியா, தி பிளாக் நிறுவனம் மற்றும் தி பிளாக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நுகர்வோர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்த பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதுடன், நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


