எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கவர்னர்கள், ஜனாதிபதி மாநில மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி திரெளவுபதி முர்மு கேள்விகள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை சீர்குலைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பை பாதுகாக்க முன் வாருங்கள் என 8 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காளம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், “சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்விகள் கேட்டு ஜனாதிபதி அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் மேற்குறிப்பிட்டுள்ள மாநில முதல்வர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்குகிறேன். என்று முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: இந்தியக் ஜனாதிபதி, மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், கடந்த 13-5-2025 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின்கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு ஒன்றினை அனுப்பியது தாங்கள் அறிந்த ஒன்று. இந்தக் குறிப்பு எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம்.
தனது அரசாங்கத்தால் பெறப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதைக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இது மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களால் இயற்றப்படும் சட்டங்கள், மத்திய அரசால் நியமிக்கப்படுபவரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபருமான கவர்னரால் தடைபடுவதைத் திறம்படத் தடுக்கும் வகையில் உள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாட்டைத் தடுத்திட கவர்னர்களைப் பயன்படுத்திய விதத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம். குறிப்பாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற தாமதத்தை கவர்னர்கள் ஏற்படுத்துகிறார்கள் உரிய அரசியலமைப்பு அல்லது சட்டக் காரணங்கள் இல்லாமல் அவற்றை நிறுத்தி வைக்கிறார்கள்.
கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் வழக்கமான கோப்புகள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் தலையிடுகிறார்கள். கல்வி நிறுவனங்களை அரசியல்மயமாக்க பல்கலைக்கழக வேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கவர்னர்களால் இதைச் செய்ய முடிந்தது. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய பெருமக்கள், உயர் அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் அரசியலமைப்பு ஒழுக்கத்தின்படி செயல்படுவார்கள் என்று நம்பினர்.
இந்தச் சூழலில்தான், தமிழ்நாடு அரசு கவர்னருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி
(i) மசோதாக்களைக் கையாளும் போது மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்படுகிறார்.
(ii) மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்த கவர்னர் "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.
(iii) ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலமும், மசோதாக்களை அவைக்குத் திருப்பி அனுப்பாமல் இருப்பதன் மூலமும் கவர்னர் மசோதாக்களை செயலிழக்கச் செய்ய முடியாது.
(iv) ஒரு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு, இரண்டாவது முறையாக ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது கவர்னர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது.
(v) பிரிவுகள் 200 மற்றும் 201-ன்கீழ் ஜனாதிபதி மற்றும் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் கீழ் மாநில அரசுகள் தங்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் மத்திய அரசு தேவையற்ற வகையில் தலையிடாமல் இருப்பதை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு உறுதி செய்யும். நமது அரசியலமைப்பின் பாதுகாவலராக, கூட்டாட்சி அமைப்புடன் கூடிய ஜனநாயகக் குடியரசை அடிப்படையாக கொண்ட நமது சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கில் அரசியலமைப்பை சரியாக விளக்கியுள்ளது. ஆனால், வெளிப்படையாக பா.ஜ.க. இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது.
மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கினைக் கடைபிடிக்கும் கவர்னரை எதிர்கொள்ளும்போது, மற்ற மாநிலங்களும் இந்தத் தீர்ப்பினை ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தலாம். பா.ஜ.க. அரசாங்கம் தனது சூழ்ச்சியின் முதல் அங்கமாக ஜனாதிபதியை சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது. கவர்னர்களின் விவகாரத்தில் கேள்விக்குரிய பிரச்சினை ஏற்கனவே நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பால் முடிவு செய்யப்பட்டிருக்கும் போது, சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை அதிகார வரம்பைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது என்பது அனைவரும் அறிந்தது.
ஆனாலும், பா.ஜ.க. அரசு ஒரு பரிந்துரையைப் பெறுவதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது அவர்களின் தீய நோக்கத்தைக் குறிக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில சுயாட்சிக் கொள்கையையும் காத்திடும் நோக்கம் கொண்ட, பா.ஜ.க.-வை எதிர்க்கும் மாநில அரசுகள், மாநிலக் கட்சித் தலைவர்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் இந்தச் சட்டப் போராட்டத்தில் இணையுமாறு நான் ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளேன்.
சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்விகள் கேட்டு ஜனாதிபதி அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, நமது சுப்ரீம் கோர்ட் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்தபடி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் மேற்குறிப்பிட்டுள்ள மாநில முதல்வர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்குகிறேன். இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
2030-ல் டி.டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும்: தமிழ்நாடு அரசு தகவல்
05 Mar 2026சென்னை, 2030-ல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வருகிற 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கு போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
05 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
இடைக்காட்டூர் கிராமத்தில் தாக்குதல் சம்பவம்: கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
05 Mar 2026சென்னை, சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மா
-
இணையதளத்தில் கோவில் நில விவரங்களை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
05 Mar 2026மதுரை, கோவில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள்ளே எப்படியாவது மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
05 Mar 2026தஞ்சாவூா், இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க அ
-
மாநிலங்களவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த தம்பிதுரை
05 Mar 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை: ரஷ்ய அறிவிப்பு
05 Mar 2026மாஸ்கோ, ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவியையும் கேட்கவில்லை என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சு: எல்லாம் முடிந்துவிட்டதாக சைகை காட்டியது எதனால்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
05 Mar 2026தஞ்சை, தஞ்சையில் நடந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில், தேர்தல் கூட்டணி பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பேசினார்.
-
மாநிலங்களவை தேர்தலுகான வேட்புமனு தாக்கல் நிறைவு: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
05 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடையும் 6 மாநிலங்களவை தேர்தலுகான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆஃபர் கொடுத்து தி.மு.க. கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
05 Mar 2026சென்னை, 2021 தேர்தலில், தி.மு.க. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பைத் தாருங்கள். அ.தி.மு.க.
-
தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
05 Mar 2026சென்னை, தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று பிரேமலதா விஜயகாந் தெரிவித்துள்ளார்.
-
தே.மு.தி.க. சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை தேர்தலில் போட்டி
05 Mar 2026சென்னை, தே.மு.தி.க. சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டார்.
-
மாநிலங்களவை தேர்தல் தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா - கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
05 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க.
-
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்கள் பட்டியல் : 2 வாரங்களில் வெளியிட திட்டம்
05 Mar 2026சென்னை, த.வெ.க. சார்பில் இரணடு வாரங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் : அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
05 Mar 2026நியூயார்க், பல்வேறு நாடுகளிடம் இருந்து வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்
-
போர் சூழல் எதிரொலி: மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்
05 Mar 2026புதுடெல்லி, போர் சூழல் காரணமாக ரஷ்யாவில் இருந்து கூடுதல் அளவு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இதுவரை 23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்: முதல்வர்
05 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை 23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்
-
பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல்: பிரதமர் மோடி தகவல்
05 Mar 2026டெல்லி, பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்க படைகள் பயன்படுத்தியதா..? வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு
05 Mar 2026வாஷிங்டன், ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தியதாக வந்த தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் பலி 1,045 ஆக உயர்வு
05 Mar 2026தெஹ்ரான், ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் 5-வது நாளை எட்டியது.
-
ஈரானின் உச்சத்தலைவர் கமேனி மறைவிற்கு இந்தியா இரங்கல்
05 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் மறைவிற்கு 6 நாட்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க.வில் இணையுமாறு ஜெயக்குமாருக்கு செங்கோட்டையன் அழைப்பு
05 Mar 2026ஜெயக்குமார் வேண்டுமானால் த.வெ.க.விற்கு வரலாம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய நாள் எப்படி?
05 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Mar 2026- ஆழ்வார் திருநகரியில் ரதம்
- கோவை கோணியம்மன் தெப்பம்.
- திருவாரூர் தியாகராஜர் விழா தொடக்கம்.
- வேதாரண்யம் சிவபெருமான் பவனி.
- காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.


