Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்கிழமை பாய்ந்தது. கிணறு முழுவதும் தண்ணீா் இருந்ததால், காா் முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கியது. இந்த சம்பவத்தில் ஓட்டுநா் உள்பட 5 போ் நீரில் மூழ்கி பலியாகினா். 

அதில், கொ்சோம், சைனிகிருபா, ஜெரின்எஸ்தா் ஆகியோா் கதவைத் திறந்து நீந்தி வெளியே வந்தனா்.  சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னா், காா் மற்றும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தையும் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச்செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளம் அருகே சாலையோரத்தில் இருந்த கிணற்றில் ஆம்னி வேன் நேற்று விழுந்த விபத்தில் 5 பேர் பலியானதையடுத்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து