எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்குவதற்காக முக்கிய நட்பு நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் கொண்ட குழுக்களை இந்தியா அனுப்பவுள்ள நிலையில், பாகிஸ்தானும் அமைதிக்கான தனது தரப்பு நிலைப்பாட்டை விளக்கும் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறது.
முன்னதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் (பி.பி.பி.) பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் உருவாகியிருக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை விளக்க ஒரு குழுவினை வழிநடத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப் தன்னைக் கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்திருதார். அதனைத் தொடர்ந்து இந்த விஷயம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சர்தாரி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இன்று (நேற்று) பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் என்னை அழைத்து அமைதிக்கான பாகிஸ்தான் தரப்பு முயற்சிகளை உலக அரங்கில் விளக்குவதற்கான குழுவினை வழிநடத்துமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். இந்த இக்கட்டான நேரத்தில் இந்த சவாலான பணியினை ஏற்றுக்கொள்வதையும், தேசத்துக்கு சேவையாற்றுவதையும் பெருமையாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கிறது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தான் தனது நற்பெயரை சரி செய்வதற்கான முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


