எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. இறந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடலை எரித்து அதை பொது இடங்களில் போடும் முறையை பின்பற்றும் சைக்கோ கொலையாளி பற்றி சிறு துப்பு கூட கிடைக்காமல் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார். மறுபக்கம் கொலை சம்பவங்கள் தொடர்கிகிறது.
நவீன் சந்திரா வழக்கை விசாரிக்க தொடங்கிய உடன் அவருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அதை வைத்து கொலை செய்யப்பட்டவர்கள் யார்? என்பதை கண்டுபிடிப்பவர், கொலையாளி யார்? என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார் ?, எதற்காக இத்தனை கொலைகள் ? ஆகிய கேள்விகளுக்கான விடையை சுவாரஸ்யமான திரைக்கதையோடும், எதிர்பார்க்காத திருப்பங்களோடும் சொல்வதே ‘லெவன்’ படம்.
கதை திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதோடு, கொலையாளி யார் ? என்பதில் இருக்கும் திருப்பங்கள், படத்தின் கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை நீள வைத்து பார்வையாளர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ், கொலை செய்யப்படும் நபர்கள் யார்? மற்றும் எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் ? என்ற கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி முதல் பாதி படத்தோடு பயணிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் கொலையாளி யார் ? என்ற எதிர்பார்ப்போடு படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். ஒரு இடத்தில் கொலையாளி யார்? என்ற சஸ்பென்ஸை உடைப்பவர், அடுத்த சில நிமிடங்களில் அதிலும் ஒரு திருப்பத்தை வைத்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.
மொத்தத்தில் இந்த ‘லெவன்’ அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


