எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை ஆயத்த நிலை மற்றும் மேட்டூர்அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் - முதல்வர்.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர்மாளிகையின் 10-வது தள கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலைமற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் தொடக்கத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வரவேற்புரை ஆற்றினார். பின்னர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
இயற்கைச்சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும்,அரசு அதிகாரிகளான உங்களுக்கும்தான் இருக்கிறது.இப்போது, நாம் தென்மேற்குப் பருவமழையைஎதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் இயல்பான மழைப்பொழிவுதான்இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.என்னதான் நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மைஉள்ளிட்டவற்றுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர்வெள்ளம், நீலகிரி மலைப் பகுதிகளில் ஏற்படுகிற நிலச்சரிவு போன்றபாதிப்புகளையும் இதனால் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.அதுமட்டுமல்ல, அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ளகடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள,அனைத்து மாவட்ட கலக்டர்களும் , மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல்தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும்வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திடவேண்டும். பேரிடர்மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்றவசதிகளோடும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல;பேரிடர் மேலாண்மைத் திட்டம் - தகவல் தொடர்புத் திட்டம் - முதல்நிலைமீட்பாளர்களின் பட்டியல் மற்றும் அ தொலைபேசி எண்கள்அனைத்தையும் சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.\வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடந்து, நாம்ப்ரோ-ஆக்டிவாகச் செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பலபாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதற்காக நான் சில ஆலோசனைகளைச்சொல்ல விரும்புகிறேன்.
பேரிடர் காலங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைக்கேட்டும், தங்களுடைய குறைகளைச் சொல்லியும் குரல் எழுப்புவதுஊடகங்களிலேயும், சமூக வலைதளங்களிலேயும்தான். எனவே, சோஷியல்மீடியாக்களில், செய்திகளில் வருகிற புகார்களை விசாரித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படிஎடுக்கப்படுகிற நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் சென்றுசேருகிறதா என்பதைத் திரும்பவும் நீங்கள் ஃபாலோ-அப் செய்யவேண்டும். குறைகளைச் சொல்கின்ற மக்களிடையேயும், உதவி கேட்கின்றமக்களிடையேயும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்மைநம்பிதான் உதவி கேட்கின்றார்கள் என்ற பொறுப்போடு நீங்கள் நடந்துகொள்ளுங்கள். பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு மற்றும்அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் குறித்ததகவல்கள் நுகர்வோருடைய செல்போனுக்கு SMS-ஆ அனுப்ப வேண்டும்.அதுமட்டுமல்ல, அவர்கள் பகுதியில் எப்போது மறுபடியும் மின்சாரம் வரும்என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும்.அடுத்து, சாலைப் பணிகள் நடைபெறுகிற காரணங்களினால், சிலஅசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, தமிழ்நாடு\முழுவதும் அப்படி இருக்கின்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து,அங்கே தகுந்த தடுப்புச் சுவர்கள், தடுப்பு வேலிகள், போதிய வெளிச்சம்,ஒளிரும் டைவெர்ஷன் போர்டுகள் போன்றவற்றை வைத்து விபத்துகளைத்தடுக்க வேண்டும்.
அடுத்து, மழைக்காலங்களில், நெல் மூட்டைகள் மற்றும் உணவு\தானியங்கள் மழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சேமிப்புகிடங்குகள் மற்றும் கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், கொசுத்தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.அடுத்து,\ சென்னை மாநகராட்சியைப்பொறுத்தவரைக்கும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடியமழைநீர் வடிகால், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை காலத்துக்குத்தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாகமேற்கொள்ளவேண்டும். அடுத்து, நீர்வள ஆதாரத் துறையைப் பொறுத்தவரைக்கும்17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடிஉயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர்இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத்தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவைசாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அடுத்து, வேளாண்மை–உழவர் நலத்துறையைப்பொறுத்தவரையில், தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார்,குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளபல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன.எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தென்மேற்குபருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால்குறுவை சாகுபடி அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதால்,வேளாண் பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்டஎல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதையும், குறுவைசிறப்புத் தொகுப்பு திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக விவசாயிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்திட, வேளாண்களஅலுவலர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு\கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர்சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள்மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தைக் கடந்து செல்ல அனைத்துத் துறைகளும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதற்கு பிறகு, தென்மேற்குபருவமழை ஆயத்த நிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்துவிளக்கப் படத்தின் மூலம், வருவாய்த்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,வி ளக்கினார்.பின்னர், நகராட்சி நிருவாகத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும்உழவர் நலத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை,நீர்வளஆதாரத் துறைகளைச் சார்ந்த செயலாளர்கள், காவல் துறை தலைமை இயக்குநர்ஆகியோர், தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்குறித்து கூட்டத்தில் எடுத்துரைத்தனர். முதல்வர், துணை முதல்வர் மற்றும்அமைச்சர்கள் துறை அதிகாரிகளுக்கு தங்களதுஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினர்.கூட்டத்தின் இறுதியில், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்நன்றியுரை ஆற்றினார்.இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன் கே.என்.நேரு.எ.வ.வேலு,.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ். சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால்காவல் துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
20 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று அனைத்து மாலை மாற்றுத்திறனாளிகள் பயன்தரத்தக்க வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின
-
உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 Jun 2025சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
-
திட்டங்களின் செயல்பாடு குறித்து நான்கு துறை அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
20 Jun 2025சென்னை, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம்
-
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
20 Jun 2025சென்னை, ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
-
தங்கம் விலை சரிவு
20 Jun 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 20) பவுனுக்கு ரூ.440 என குறைந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,680-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-06-2025.
21 Jun 2025 -
நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேட்டி
21 Jun 2025மதுரை, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
-
ஈரானின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
21 Jun 2025தெஹ்ரான், ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
-
பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக உயர்வு: நிதிஷ்
21 Jun 2025பீகார், பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
21 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை ஆகிறது.
-
ட்ரம்ப் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்: ஈரான் அதிபரின் ஆலோசகர் கருத்து
21 Jun 2025தெஹ்ரான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெர
-
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
21 Jun 2025சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா
-
உலகத்தை இணைத்த யோகா: விசாகப்பட்டினம் யோகா தினம் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
21 Jun 2025விசாகப்பட்டினம், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
-
புதுப்பொலிவு கண்ட வள்ளுவர் கோட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
21 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
போர் நடைபெறும் ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களையும் வெளியேற்ற இந்திய அரசு முடிவு
21 Jun 2025புதுடெல்லி, நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவி
-
உடல்நலக்குறைவால் வால்பாறை எம்.எல்.ஏ., காலமானார்
21 Jun 2025கோவை : வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, 60, நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.
-
அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தல்
21 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது
-
சிற்றுந்துகள் திட்டத்தால் 1 கோடி மக்கள் பயணம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
21 Jun 2025சென்னை, மினி பேருந்து திட்டத்தால் இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
21 Jun 2025தர்மபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
21 Jun 2025ஜெனீவா : இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்
21 Jun 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜ்நாத்
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
21 Jun 2025சென்னை : ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள்.
-
போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து இந்தியர்கள் 1000 பேரை அழைத்து வர ஏற்பாடு
21 Jun 2025புதுடெல்லி : போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து மேலும் 1000 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வால்பாறை அருகே பயங்கரம்: சிறுத்தை தூக்கி சென்ற சிறுமி சடலமாக மீட்பு
21 Jun 2025வால்பாறை : வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், நேற்று சிறுமி சடலமாக மீட்கப
-
இஸ்ரேலிடம் போரை நிறுத்த சொல்வது மிகவும் கடினம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
21 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல் போர் நிறுத்த சொல்வது கடினம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.