எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மசோதாக்கள் மீது முடிவெடுக்க உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது. இதனால் கொந்தளித்த துணை ஜனாதிபதி தன்கர் உச்சநீதிமன்றம் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறது என்றும் நீதித்துறை அதன் வரம்புக்குள் தான் இருக்க வேண்டும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "அரசியலமைப்பு மட்டுமே உயர்ந்தது என்றும், பாராளுமன்றம் அல்லது நிர்வாகக் குழு தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் போதெல்லாம் நீதித்துறை தலையிடும்" என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி14 கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பி.ஆர். கவாய் மீண்டும் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் பேசிய பி.ஆர். கவாய், "நீதித்துறையோ, அரசாங்கமோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல. இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது. 3 தூண்களும் அரசமைப்பின்படி நடக்க வேண்டியவை. அரசியலமைப்பைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பாராளுமன்றம் அடிப்படை அரசியலமைப்பு கட்டமைப்பைத் மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


