எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் நினைவு நாளை யொட்டி எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன். இவர் 1988ம் ஆண்டு 23 நாட்கள் தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, ஜானகி ராமச்சந்திரன் 1996 மே 19ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி , ஜானகி ராமச்சந்திரனுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், எம்.ஜி.ஆரின் மனைவியாருமான ஜானகி ராமச்சந்திரனின் நினைவு நாளான இன்று (நேற்று), புரட்சித்தலைவரின் தொண்டர்கள் மீதான அவர்தம் அளவற்ற அன்பையும் , அளப்பரிய தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்' என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


