Idhayam Matrimony

தமிழ்நாட்டில் இயல்பை விட 90 சதவீதம் அதிக மழைப்பொழிவு

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
Rain 2023-09-29

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் இயல்பைவிட 90 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் 1 முதல் நேற்று வரை பெய்த மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சியில் இயல்பான மழை அளவு சராசரி 6.2 மட்டுமே ஆனால் தற்போது 28 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. இந்த அளவானது கிட்டத்தட்ட இயல்பைவிட 83 சதவீதம் அதிகமாகும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்தாலும் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் மார்ச் 1-ல் இருந்து தற்போது வரை பெய்த மழையின் அளவு இயல்பை விட கிட்டத்தட்ட 90 சதவீதம் அதிகமாக பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து