எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை 11 நாட்களில் 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோடை விடுமுறை சீசன் காரணமாக தற்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு செல்கிறார்கள். தொடர்ந்து நேற்று வரை கடந்த 11 நாட்களில் 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் படகுமூலம் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர். நேற்று காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


