எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சொந்த ஊர் திரும்பினர்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், பல்வேறு அணிகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனிடையே, சில நாள்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மிட்செல் ஸ்டார்க், ஜேக் ஃப்ரேசர் உள்ளிட்ட வீரர்கள் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், கம்மின்ஸ், ரபாடா, ஹெட் உள்ளிட்டோர் மீண்டும் இந்தியாவுக்கு வருவதாக தெரிவித்திருந்தனர்.
ஹெட்டுக்கு கொரோனா...
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் டிராவிஸ் ஹெட்டின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், உடல்நிலையைப் பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார் என்றும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் வெட்டோரி குறிப்பிட்டிருந்தார்.
பின்னடைவு...
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணி விளையாடிய 11 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மழையால் ஒரு போட்டி ரத்தானது. புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி, ஏற்கெனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், நடப்பு தொடரில் ஐதராபாத் அணிக்காக இரண்டு அரைசதங்கள் உள்பட 281 ரன்கள் குவித்துள்ள ஹெட் விளையாடாதது பின்னடைவாக கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


