எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளார் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே வீரர் பிலெஸ்ஸிங் முசரபனி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
போட்டிகள் ஒத்திவைப்பு...
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் லுங்கி இங்கிடி, தென்னாப்பிரிக்கா அணியுடன் பயிற்சியில் இணையவுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதனிடையே, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கிறது.
லுங்கி இங்கிடி விலகல்...
இந்த போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பிளே ஆப் சுற்றுகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி வருகின்ற மே 26 ஆம் தேதி தாயகம் திரும்ப இருப்பதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிலெஸ்ஸிங் முசரபனி...
இவருக்கு மாற்றாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிலெஸ்ஸிங் முசரபனி அறிவிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக 70 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை ரூ. 75 லட்சத்துக்கு பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


