எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை , கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
2025 – 2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்து உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் அரசு உயர் நிலைக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், தொழில் நுட்பத் திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025 – 2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர. நா. முருகானந்தம்,சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர். பிரதீப் யாதவ்தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், உயர் கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி, நிதித்துறைசெயலாளர் (செலவினம்) எஸ்.நாகராஜன், கல்லூரிக் கல்வி ஆணையர் திஎ.சுந்தரவல்லி, தொழில் நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


