எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சாகன் புஜ்பால் மகாராஷ்டிர அமைச்சரவையில் அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
77 வயதான புஜ்பாலுக்கு மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தனது ஐந்து மாத அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார். புஜ்பாலின் பதவியேற்புடன் மாநில அரசில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 19 பேர், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 9 பேர் உள்பட 39 பேர் மகாராஷ்டிர அமைச்சரவையில் உள்ளனர்.
பல ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் உள்ளவர் சாகன் புஜ்பால். கடந்தாண்டு டிசம்பரில் முதன்முதலாக பட்னவீஸ் தலைமையிலான அமைச்சரவை விரிவுபடுத்தியபோது, சாகன் புஜ்பாலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மாநிலத்தில் முக்கியமான, அனுபவமிக்க தலைவர் நீக்கப்பட்டது பொதுமக்களை ஏமாற்றமடையச் செய்தது.
சர்பஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை வழக்கில் அவரது நெருங்கிய உதவியாளர் வால்மிக் கரட் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் உணவு, சிவில் விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவைத் தொடர்ந்து சாகன் புஜ்பால் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


