Idhayam Matrimony

சீமான் வசைபாடாத ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள்: அமைச்சர் சேகர்பாபு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : சீமான் வசைபாடாத ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், தமிழகத்தில் சாலைகள், உள்கட்டமைப்பு சரியில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சேகர்பாபு, தமிழிசை பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர். அங்கு தள்ளாடின்னே இருந்தவர்களை பார்த்துட்டு கவர்னராக வந்தவங்க. அதனால அவங்க எது பார்த்தாலும் தள்ளாட்டமாவே தெரிகிறது. தமிழிசைக்கு மீடியா மேனியா. ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார். நீங்கள் நின்று கொண்டு இருக்கும் இந்த சாலை எப்படி தரமானதாக இருக்கிறது என்று நீங்கள் அவரிடம் அடுத்த முறை கேள்வி கேளுங்கள் என்றார்.

இதனிடையே, தி.மு.க. துரோகி, காங்கிரஸ் எதிரின்னு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, அவர் வசைபாடாத ஆள் யாராவது இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்... என் வாயால் சொல்லக்கூடாது. அவர் வசைபாடா ஆட்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து