எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி, வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் மீண்டும் துவங்குகிறது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்தது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான அட்டாரி, வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாள்தோறும் மாலையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந் நிலையில், நேற்று முதல் தினமும், அட்டாரி,வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு நடைபெறும். 12 நாட்கள் கழித்து, பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள அட்டாரி, வாகா எல்லையிலும், பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையிலும் நேற்று முதல் மீண்டும் தொடங்கும். இதற்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் வாயில்கள் மூடப்பட்டு இருக்கும். நிகழ்வின் போது பங்கேற்பாளர்கள் கைகுலுக்க மாட்டார்கள்.
1959-ம் ஆண்டு முதல் எல்லையில் நடத்தப்பட்டு வந்த கொடியிறக்க நிகழ்வு, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் மே 8ல் இருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது 12 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


