எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தங்கம் விலை நேற்று (மே.21) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 13-ம் தேதி (மே 13) காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது. (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது.
பின்னர் மீண்டும் தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. அதன்படி, நேற்று (புதன்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,11,111-க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


