எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ : அரிசி வாங்குவது குறித்த சர்ச்சை கருத்தை தொடர்ந்து வேளாண் மந்திரி டகு இடொ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜப்பான் வேளாண் துறை மந்திரி டகு இடொ. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கியூஷா தீவில் உள்ள சாஹா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகச்சியில் பேசிய அவர், நான் எப்போதும் கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியை பரிசாக கொடுப்பார்கள் என்றார். இதனிடையே, ஜப்பானில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் மந்திரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜூலை மாதம் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேளாண் மந்திரியின் பேச்சு அரசுக்கு எதிரான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது. மேலும், டகு ராஜினாமா செய்யாவிட்டால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில், அரிசி வாங்குவது குறித்த சர்ச்சை கருத்தை தொடர்ந்து வேளாண் மந்திரி டகு இடொ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது பேச்சுக்கு நாட்டு மக்களிடையே அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


