எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : கேன்ஸ் திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பிரபல ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டன். எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை பிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். குளோரி, ட்ரெய்னிங் டே ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் இப்போது நடித்துள்ள படம் ‘ஹையஸ்ட் டு லோயஸ்ட்’. ஸ்பைக் லீ இயக்கியுள்ள இந்தப் படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் இவ்விழாவில் டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தங்கப்பனை விருது வழங்கப்பட்டது. விருதை இயக்குநர் ஸ்பைக் லீ அவருக்கு வழங்கினார். அங்குக் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழா இயக்குநர் தியரி ப்ராமாக்ஸ், டென்ஸல் வாஷிங்டனின் பிரபலமான திரைப்படங்களின் கிளிப்பிங்ஸ் கொண்ட வீடியோவை திரையிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


