Idhayam Matrimony

எல்லையில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் கைது

புதன்கிழமை, 21 மே 2025      இந்தியா
Jail

பஞ்சாப், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

செவ்வாய்க்கிழமை மாலை சர்வதேச எல்லையைத் தாண்ட முயற்சித்த நபரின் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் கவனித்துள்ளனர். உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். அமிர்தசரஸில் உள்ள கரிம்புரா கிராமத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலிருந்து பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைக்காக அவர் உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவியது. 

பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருநாட்டுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 3 நாள்களில் போர் நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து