எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, சர்வதேச புக்கர் பரிசு வென்ற கன்னட எழுத்தாளருக்கு பாராட்டு குவிகிறது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் பானு முஷ்டாக். கன்னட எழுத்தாளரான இவர் சமூக செயற்பாட்டாளராகவும், வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, இவர் கன்னடத்தில் ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ் என்ற தலைப்பில் புத்தக தொகுப்பை எழுதியிருந்தார். 1990 முதல் 2012-ம் ஆண்டு இடைவெளியில் வெளியிடப்பட்ட இந்த புத்தக தொகுப்பு தென்னிந்தியாவில் இஸ்லாமிய மதப்பெண்களின் வாழ்வியல் குறித்து வெளிப்படுத்தியது.
இந்த புத்தகம் ஆங்கிலத்தில் ஹார்ட் லேம்ப் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், ஹார்ட் லேம்ப் புத்தகத்தை எழுதிய பானு முஷ்டாக் சர்வதேச புக்கர் பரிசு வென்றுள்ளார். சர்வதேச புக்கர் பரிசு வெல்லும் முதல் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் ஆவார். அவருக்கு லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் விருதும் 58 லட்ச ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச புக்கர் பரிசு வென்ற பானுவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


