எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2 வருடங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாண்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் 14,000 குழந்தைகள் அடுத்த சில நாட்களில் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்தது. மேலும் காசாவை முழுமையாக கைப்பற்ற போவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்தார். இதனை கண்டித்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் வெளியில் இருந்து எந்த அழுத்தத்தையும் ஏற்க போவதில்லை என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருபுறம் வெடிகுண்டு தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என இரண்டினாலும் காசா மக்களை மரணம் துரத்துகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


