Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 52 பேருக்கு சிகிச்சை

புதன்கிழமை, 21 மே 2025      இந்தியா
Corona 2023 04 02

Source: provided

மும்பை : மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக லேசான அறிகுறிகளுடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதித்து உயிரிழந்த இரண்டு பேரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இணை நோய்களை கொண்டவர்கள். இறந்தவர்களில் ஒருவருக்கு ஹைபோக்ளைசீமியா வலிப்புடன் நெஃப்ரோடிக் நோய் இருந்தது. மற்றொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

மகாராஷ்டிராவில் ஜனவரி முதல் மொத்தம் 6,066 ஸ்வாப் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அவற்றில் 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவற்றில் 101 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் புனே, தானே மற்றும் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது, லேசான அறிகுறிகளுடன் 52 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளிலும் கூட கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து