எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210வது கோப்ரா படை, சத்தீஸ்கர் மாநில காவல் துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் ஆகியோர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (மே 22) அந்த நடவடிக்கையின்போது, கோப்ரா படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக, படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டுள்ளார். இத்துடன், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் அப்பகுதியிலுள்ள நக்சல் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள், இந்தியாவிலுள்ள நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சத்தீஸ்கரின் நாராயணப்பூர் - பிஜப்பூர் மாவட்ட எல்லையில், நேற்று முன்தினம் (மே 21) பாதுகாப்புப் படையினரால் நக்சல் படையின் முக்கிய தளபதி உள்பட 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


