முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெத்தம்பெட்டமைன் கடத்தல்: சென்னையில் மேலும் 4 பேர் கைது

வியாழக்கிழமை, 22 மே 2025      தமிழகம்
Jail-1

Source: provided

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொத்தவால்சாவடி போலீஸார் கடந்த 13-ம் தேதி மின்ட் தெருவிலுள்ள துணிக்கடை அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த கைபை சோதனையிட்டனர்.

அதில், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருள் வைத்திருந்த சவுகார்பேட்டையை சேர்ந்த மணிஷ்குமார் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்பேரில் பூக்கடை பகுதியைச் சேர்ந்த ரோஹித்குமாரை (25) கடந்த 16-ம் தேதி கைது செய்தனர். சிறையில் அடைப்பு: இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த கொத்தவால்சாவடி தர்ஷன் (25), ஏழுகிணறு அமீத் அஃபாத் (26), திருவல்லிக்கேணி முகமது சித்திக் (35), ராமநாதபுரம் மாவட்டம் செல்வகுமார் என்ற அப்துல்லா (39) ஆகிய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர், 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து